Categories
மாநில செய்திகள்

புலியை கொல்ல கூடாது…. பிடித்து வனத்தில் விடுங்கள் – வானதி சீனிவாசன்

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் மாதன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மசினகுடியில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது T3 புலி அவரை தாக்கி சடலத்தை உண்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த புலி ஏற்கனவே கூடலூரில் 3 பேரை கொன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனித உயிருக்கு அச்சுறுத்தலான அந்த புலியை பிடிப்பதற்கு வனத்துறையினர் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர்.

ஆனால் இரண்டு மூன்று நாட்களாகியும் பிடிபடாத அந்த புலி ஞாயிற்றுக்கிழமை அன்று மேபீல்டு எஸ்டேட்டில் புகுந்து மாட்டை அடித்துக் கொன்றது. இதையடுத்து அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான முயற்சி தோல்வியடைந்ததால் அந்தப் புலியை எங்கு பார்த்தாலும் சுட்டுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலுக்கு முன் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதாக கூறிய திமுக தற்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. நீலகிரி புலியை சுட்டுக் கொல்லும் உத்தரவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த புலியை சுட்டுக் கொல்லாமல் வனத்தில் கொண்டு விட வேண்டும் என்று அவர் கூறினார்.

Categories

Tech |