வனவிலங்குகளில் ஒன்றாக உள்ள புலிகள் கூட்டத்துக்கு நடுவில் கோல்டன்ரிட்ரீவர் வகையை சேர்ந்த நாய் ஒன்று தைரியத்துடன் உலவிய காட்சிகள் அடங்கிய வீடியோவானது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவிற்கு கீழே பல புலிகுட்டிகளை வளர்த்தெடுப்பது என்பது நாய்க்கு எளிய வேலை அல்ல என பதிவிடப்பட்டுள்ளது. அதன்படி புலிகள் பிறந்த குட்டியாக இருந்தபோது அதற்கு அந்த ரிட்ரீவர் நாயானது பால் கொடுத்து வளர்த்துள்ளது.
இதனால் அந்த நாய் தான் தங்களுடைய தாய் என்று புலிகள் நினைத்ததற்கு காரணம் ஆகும். இதன் காரணமாக புலிகளின் கூட்டத்தில் நாய் எளிதில் உலவியபடி அச்சம்இன்றி இருந்துள்ளது. பாசப் பிணைப்பில் புலிகள் கட்டுண்டு கிடக்கிறன. டைகர் பிக்ஃபேன் எனும் பெயரிலான இன்ஸ்டாகிராம் பதிவில் வீடியோவானது வெளியிடப்பட்டுள்ளது. இதை 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். அத்துடன் அந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.