Categories
தேசிய செய்திகள்

புலிகளை நோக்கி கற்களை வீசும் அநியாயம்… கொதித்துப் போன நடிகை ரவீனா தாண்டன்‌…!!!!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் புலிகள் மீது பார்வையாளர்கள் கற்கள் வீசுவதாக நடிகை ரவீனா புகார் அளித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் வான்விஹார் என்னும் பகுதியில் தேசிய உயிரியல் பூங்கா  அமைந்துள்ளது. இந்த பூங்காவில் தனிப்பகுதியில் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள புலிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் புலிகள் மீது கற்களை வீசுகிற கொடூர சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தி நடிகை ரவீனா தாண்டன் இந்த சம்பவத்தை நேரில் பார்த்து கொந்தளித்து போனார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறியிருப்பதாவது, உயிரியல் பூங்காவில் புலிகள் வாழும் பகுதியில் பார்வையாளர்கள் கற்களை வீசி வருகின்றனர். அவர்களிடம் அப்படி செய்யாதீர்கள் என கூறினால் சத்தமிட்டு சிரிக்கின்றார்கள். கூண்டை அசைப்பது, கற்களை வீசுவது, சிரிப்பது, போன்ற கொடுமையான சம்பவங்கள் நடைபெறுகிறது. அங்கு புலிகளுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்துவதாகவும், இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியும் எனவும் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |