Categories
சினிமா தமிழ் சினிமா

“புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன்”…. நடிகை கௌதமி ஓபன் டாக்…!!!

நாவின் சுவைக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள் என நடிகை கௌதமி வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகை கௌதமி இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும்கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் வேலை செய்துள்ளார்.

இந்நிலையில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “நான் கொடிய புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன். இயற்கை விவசாயத்தை தவிர்த்து விளைவிக்கப்படும் பொருட்கள், சுவை கூட்டப்பட்ட உணவு பொருட்கள் ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் பல்வேறு உடல் உபாதைகள் வருகின்றன. சுவைக்கு அடிமையாகி ஆரோக்கியத்தை கெடுத்துகொள்ள வேண்டாம்” என கூறினார்.

Categories

Tech |