Categories
தேசிய செய்திகள்

புறவழிச்சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாற்றம்…. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி….!!!!!

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை எண் 79-இல் உளுந்தூர்பேட்டை – சேலம் இடையிலான 136 கி.மீ தொலைவில் உள்ள புறவழிச் சாலைகளை இரு வழிச் சாலைகளில் இருந்து நான்கு வழிச்சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க  பல கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் சேலம் மற்றும் உளுந்தூர்பேட்டையில் உள்ள மொத்தம் எட்டு புறவழிச் சாலைகளில் ஆறு புறவழிச் சாலைகளை நான்கு வழி சாலைகளாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த பணிகளில் நான்கு பணிகள் 2023 ஆம் ஆண்டு ஜூலைகளும் மீதமுள்ளவை 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் முடிவடையும் என அவர் தெரிவித்துள்ளார்

Categories

Tech |