Categories
மாநில செய்திகள்

புரட்டி போட்ட புயல்… மக்களுக்கு நிவாரணம்… முதல்வர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் மற்றும் கனமழையால் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று முன்தினம் அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாயும் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 6 லட்சம் என மொத்தம் 10 லட்சம் நிவாரண நிதி உதவியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி புயலால் உயிரிழந்த ஆடு மற்றும் மாடு உள்ளிட்டவை, சேதமடைந்த வீடுகளை சரி செய்யவும் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |