தமிழகத்தில் புயல் காரணமாக வேல் யாத்திரைக்கு பதிலாக களப்பணி ஆற்றுவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதிலும் பாஜக சார்பாக வெற்றிவேல் யாத்திரை பல்வேறு தடைகளையும் மீறி நடத்தப்பட்டு வருகின்றது. அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் பாஜக அதனை கைவிடவில்லை. இந்நிலையில் நிவர் புயல் காரணமாக யாத்திரை இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், “புயல் தாக்க கூடிய பகுதிகளில் உள்ள பாஜக தொண்டர்கள் மக்களுக்கு உதவுவதற்கு எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். தமிழகத்தில் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் யாத்திரை செல்வதற்கு பதில் நாம் களப்பணி ஆற்ற செல்ல வேண்டும் ” என்று அவர் கூறியுள்ளார்.