Categories
தேசிய செய்திகள்

புயல்: யாருக்கும் விடுமுறை எடுக்கக் கூடாது…. முதல்வர் திடீர் உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.

சென்னையிலிருந்து 830 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு உள்ளது. 12 கிலோமீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் நிலையில் இன்று மாலை புயல் உருவாக கூடும் எனவும் இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மாண்டஸ் புயல் தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு பேசிய முதல்வர் ரங்கசாமி, அதிகாரிகள் யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாக எடுக்கவும் நிவாரண முகாம்களில் மக்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |