Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புயல் – மழையால் போக்குவரத்து பாதிப்பு இல்லை… எப்படி தெரியுமா…? போலீஸ் கமிஷனர் வெளியிட்ட தகவல்…!!!!!

சென்னையில் உள்ள கீழ்பாக்கம் ஓட்டேரி புளியந்தோப்பு மற்றும் கொண்டிதோப்பு போன்ற போலீஸ் குடியிருப்புகளில் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால்  நேற்று மாலை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன் பின் போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் போலீஸ் குடும்பத்தினரிடம் கமிஷனர் குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார். இந்நிலையில்  நிருபர்களிடம் பேசிய அவர், சென்னையில் புயல் மற்றும் மழையின் போது நான் உட்பட அனைத்து உயரதிகாரிகளும் களத்தில் நின்று பணியாற்றிக் கொண்டிருந்தோம்.

மேலும் சாலைகளில் நீர் தேங்காதபடி அதிகாலை 3 மணி வரை மாநகராட்சி, தீயணைப்பு துறையுடன் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தோம். இதனை தொடர்ந்து சாலைகளில் விழுந்த மரங்களை உடனுக்குடனாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டோம். மேலும்  விடிய விடிய போலீசார் ஆற்றிய  களப்பணியின் காரணமாக சென்னையில் போக்குவரத்து பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. தமிழக அரசு ஏற்கனவே போலீஸ் குடியிருப்புகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்கு 2.57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இந்த பணத்தின் மூலமாக தற்போது குறைபாடுகளை சரி செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் சென்னையில் மடிப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். டாக்டர் அறிவிப்பு வெளியிட்ட பின் இறப்பு உறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |