Categories
மாநில செய்திகள்

புயல் பாதிப்புகள்… துணை முதல்வர் நேரில் ஆய்வு…!!!

புயல் பாதிப்புகள் பற்றி தரமணி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் துணை முதல்வர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றார்.

வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.

இந்நிலையில் தரமணி மட்டும் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். மேலும் அப்பகுதியில் உள்ள மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

 

Categories

Tech |