Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி… நாளை சென்னையில் ரத்து… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

புயல் காரணமாக சென்னையில் இருந்து செல்லும் முத்துநகர் விரைவு ரயில் மற்றும் மைசூர் விரைவு ரயில் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புயல் காரணமாக சென்னையில் இருந்து நாளை தூத்துக்குடி செல்லும் முத்துநகர் விரைவு ரயில் மற்றும் மைசூர் விரைவு ரயில் மதுரையுடன் நிறுத்தப்படும் என்று தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இரண்டு ரயில்களும் தூத்துக்குடிக்கு பதிலாக நாளை மதுரையில் இருந்து புறப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பு ரயில் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |