Categories
மாநில செய்திகள்

புயல் எச்சரிக்கை… ரேஷன் கடைகளில்… உடனே போங்க… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கையாக மக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவடைந்து நிவர் புயலாக உருவெடுத்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் தாழ்வான பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் தாழ்வான பகுதிகள் உள்ளிட்ட 4,713 இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு போதிய உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் புயல் காரணமாக முன்கூட்டியே மக்கள் உணவு பொருட்களை வாங்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அதனால் மக்கள் அனைவரும் முன்கூட்டியே தங்களின் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |