தமிழகத்தில் கரையை கடக்கும் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
வங்ககடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது. அந்த நிவர் புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி புயல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றது.
இந்நிலையில் புயலை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளோம் என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. அதற்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் நான்கு கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன. இது தவிர 15 பேரிடர் மேலாண்மை குழுக்களும் தயார் நிலையில் இருப்பதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.