Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பும்ரா, ஜடேஜா இல்லாததால் தோல்வி….. “சாம்சன், நடராஜன், உம்ரன் மாலிக் ஏன் இல்லை?…. பிசிசிஐ-யை விளாசும் ரசிகர்கள்..!!

இந்திய அணி அரையிறுதியில் தோல்வியடைந்த நிலையில் இந்த பந்துவீச்சாளர்களை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்திருக்க வேண்டும் என ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பிய போதிலும் விராட் கோலி (50), ஹர்திக் பாண்டியா (63) ஆகியோரின் அதிரடியால் 6  விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது..

அதன் பின் ஆடிய இங்கிலாந்து அணி ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியால் ஒரு விக்கெட் கூட இழக்காமல் 16 ஓவரில் 170 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து. இந்த தோல்வியை இந்திய அணி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்திய அணி வெற்றிபெற்று பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதனால் இந்திய அணியின் மீது விமர்சனம் எழுந்துள்ளது. சில ரசிகர்கள் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தால் கூட பரவாயில்லை. ஆனால் இப்படி மட்டமாக தோற்று விட்டார்களே என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக இந்திய அணியின் பந்து வீச்சில் புவனேஷ் குமார் ஓவருக்கு 12 ரன்கள் வாரி வழங்கியுள்ளனர். ஆனால் விக்கெட் எடுக்கவே இல்லை. புவனேஸ்வர் குமார் 2 ஓவர் வீசி 25 ரன்கள் கொடுத்துள்ளார். அதேபோல ஷமி 3 ஓவரில் 39 ரன்கள் கொடுத்துள்ளார். அதேபோல அஸ்வின் 2 ஓவரில் 27 ரன்கள் வாரி வழங்கியுள்ளார். அனைவரும் ரன்களை வாரி வழங்கினார்களே தவிர ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.. அதேபோல பேட்டிங்கில் கே எல் ராகுல்(5) மற்றும் 28 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆன ரோஹித் சர்மா இருவரையும் விளாசி வருகின்றனர்.

இந்நிலையில் பேட்டிங்கில் துவக்க வீரராக ருதுராஜ், சுப்மன் கில், சஞ்சு சாம்சன் ஆயோரில் யாரையாவது தேர்வு செய்திருக்க வேண்டும் எனவும், ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஆடுவதற்கு பந்துவீச்சில் தமிழக வீரர் நடராஜன், தீபக் சாஹர், 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய உம்ரான் மாலிக் ஆகியோரை சேர்த்திருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல பும்ரா மற்றும் ஜடேஜா காயத்தால் விலகியது அணி தோல்விக்கு காரணம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்..

https://twitter.com/NishanthJoyBoy/status/1590914369327890433

 

Categories

Tech |