அமெரிக்காவில் திடீரென மாயமான சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இண்டியானா பகுதியைச் சேர்ந்தவர் கிரேஸ் ரோஸ் (6 வயது). இச்சிறுமி யாரைப் பார்த்தாலும் புன்னகையுடன் எனது பெயர் கிரேஸ், எனக்கு ஆறு வயது என்று சொல்வர். இந்நிலையில் சம்பவத்தன்று கிரேஸ் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அருகில் இருப்பவர்கள் இவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிறுமி மாயமாகி 2 மணிநேரத்திற்குள் அடர்ந்த மரங்கள் உள்ள பகுதி ஒன்றில் சிறுமி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அச்சிறுமியின் பாட்டி “கிரேஸ் தன்னுடைய நகைகளை போட்டுக்கொள்ள விரும்புவர், ஆனால் அதற்கான வயது வரும் முன்னரே அவர் இந்த உலகத்தை விட்டு போய்விட்டாரே”என்று கதறி அழுகின்றார். இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெறும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.