Categories
தேசிய செய்திகள்

புனே பேருந்தில் திடீர் தீ விபத்து…27 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்… பெரும் பரபரப்பு…!!!!!

மும்பையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை அருகே பிவாண்டியில் உள்ள கிராமத்திலிருந்து புனே மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பீமா சங்கர் கோவிலுக்கு 27 பயணிகள் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த போது பீமா சங்கர் கோடகான் சாலையில் ஷிண்டோவாடி அருகே  மற்றொரு பேருந்து ஓட்டுநர் பேருந்தில் இருந்து புகை வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். அதன் பின் அவசர அவசரமாக பேருந்து நிறுத்தப்பட்டு அதிலிருந்து பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டுள்ளன.

இதனை அடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும் பேருந்து முழுவதும் தீ பரவத் தொடங்கி எரிய ஆரம்பித்தது. இந்த நிலையில் பயணிகளின் உடமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் எந்தவித காயமும் இல்லாமல் உயிர் தப்பியுள்ளனர் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த தீ விபத்திற்கான முதன்மை காரணம் ஷார்ட் சர்கியூட் இருக்கலாம்என அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

Categories

Tech |