புது வருடத்தை கொண்டாடும் விதமாக நட்சத்திர விடுதிகள், கடற்கரை ரிசார்டுகள், தனியார் கிளப்புகள் உள்ளிட்ட இடங்களில் பாடல், நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு புத்தாண்டை கோலாகலமாக வரவேற்பதற்காக பலரும் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் சொகுசு விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, சொகுசு விடுதிகளில் 80 சதவீத நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி கிடையாது. நட்சத்திர ஓட்டல்களில் 80 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஆம்புலன்ஸ் சேவையோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.