தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதன்படி சென்னையில் புத்தாண்டு அன்று பைக் ரேஸ் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரையில் மக்கள் கூடுவதற்கும், புத்தாண்டு கொண்டாடுவதற்கும் தடை விதித்து சென்னை காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
இதனைதொடர்ந்து தூத்துக்குடியில் வருகின்ற 2022 புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் அடிப்படையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.ஜெயக்குமார் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.