திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டணம் டிக்கெட்டில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக மாதம் தோறும் டிக்கெட்கள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. கொரோனா தொற்றுக்குப் பிறகு தினமும் 20,000 பக்தர்கள் தரிசனம் செய்யக்கூடிய வகையில் ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் தரிசனம் டிக்கெட் இல்லாமல் வரும் பக்தர்கள் இலவச தரிசனம் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் 70,000 முதல் 85,000 பக்தர்கள் வரை தரிசனம் செய்து கொண்டு வருகின்றனர். ஆன்லைன் டிக்கெட்டில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் குறைந்த நேரத்தில் தரிசனம் செய்ய முடிவதால் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலே அனைத்து டிக்கெட் களும் முன்பதிவு செய்யப்பட்டு விடுகிறது.
இந்நிலையில் வருகின்ற டிசம்பர் மாதத்திற்கான ஆன்லைன் தரிசனம் டிக்கெட் வருகின்ற 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தினமும் 35 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிசம்பர் மாதத்திற்கான 10.50 லட்சம் டிக்கெடுகள் வெளியிடப்படுகிறது. அதனை போல மறுநாள் 24ஆம் தேதி ஆன்லைன் மூலம் விடுதி அறைகளை முன் பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.