ஒவ்வொரு வருடத்தை போன்று இந்த முறையும் ஊழியர்களின் அகவிலைப்படி ஜனவரி மாதத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஒவ்வொரு வருடமும் 2 முறை அதிகரிக்கப்படுகிறது. அதாவது, முதல் முறை ஜனவரி மாதத்திலும், 2வது ஜூலையிலும் டிஏ அதிகரிப்பு வழங்கபடுகிறது. முன்னதாக ஜூலை மாத அகவிலைப்படி செப்டம்பர் 2022ல் அதிகரிக்கப்பட்டது.
தற்போது அடுத்த அதிகரிப்பு குறித்த எதிர்பார்பானது அதிகரித்து உள்ளது. இது 2023ம் வருடம் ஜனவரி மாதத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த அகவிலைப்படி, மார்ச் மாதம் நிலுவைத்தொகையுடன் ஊழியர்களுக்கு வழங்கப்படும். அத்துடன் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணத்தையும் அரசு அதிகரிக்கும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.