Categories
உலக செய்திகள்

துப்பாக்கி சூடு நடத்தி …. புத்தாண்டை வரவேற்ற மக்களால் …. நேர்ந்துள்ள துயரம் …!!

மக்கள் துப்பாக்கிசூடு நடத்தி புத்தாண்டை வரவேற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

லெபனான் தலைநகரமான பெய்ரூட்டில் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான மக்கள் துப்பாக்கி சூடு நடத்தி புத்தாண்டை வரவேற்கப்போவதாக இணையதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் பெரும்பாலான மக்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு புத்தாண்டை வரவேற்றுள்ளனர். இதனை உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

மேலும் புத்தாண்டு அன்று இரவில் வானத்தை நோக்கி பாய்ந்த தோட்டாக்களினால் வானமே போர்க்களம் போன்று காட்சியளித்தது என்று பலர் விமர்சித்துள்ளனர். மேலும் இந்த கொண்டாட்டங்களால் பெய்ரூட்டில் வான்வெளியில் பறந்து கொண்டிருந்த நான்கு விமானங்களை துப்பாக்கியின் தோட்டாக்கள் துளைத்துள்ளது. இதனால் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட 4 விமானங்களும் சேதமடைந்துள்ளது. மேலும் இந்த  நான்கு விமானங்களும் லெபனானின் மத்திய கிழக்கு ஏர்லைன்ஸ்க்கு உரியதாகும். மேலும் கிழக்கு நகரிலுள்ள பால்பெக்கின் அகதிகள் முகாமில் இந்தப் புத்தாண்டு கொண்டாட்டங்களினால் அகதி ஒருவர் படுகாயம் ஏற்பட்டு இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |