குவாட் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இரண்டாவது உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல நாட்டின் பிரதமர் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் இந்திய பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ளார் .மாநாட்டிற்கு முன்பாக பல்வேறு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் டோக்கியோவில் ஜப்பான் வாழ் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ஜப்பானுடனான இந்தியாவின் உறவு ஆன்மீகம், ஒத்துழைப்பு ஒன்று போன்றவை. இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் மிகப்பெரிய பங்காற்றியுள்ளது. வன்முறை, அராஜகம், காலநிலை மாற்றம் போன்ற சவால்களில் இருந்து மனிதகுலத்தை காப்பாற்ற உலகம் புத்தர் காட்டிய பாதையில் பயணம் செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.