Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

புத்தக கண்காட்சி திருவிழா…. 10% தள்ளுபடியுடன் தொடங்கிய விற்பனை…. உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!!

புத்தகம் படிப்பதினால் ஞாபகத்திறன் அதிகரிக்கும் என்று புத்தகத் திருவிழா தொடக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் ஜான் பெஸ்ட் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் மைதானத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகம் இணைந்து புத்தகத் திருவிழாவை நடத்தியுள்ளது. இந்த விழாவானது நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி உள்ளார். மேலும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செந்தில் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, ஆணையர் வைத்தியநாதன், மேயர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து இந்த விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது “அறிவு சார்ந்த உலகத்தை அமைக்க வேண்டும் என்ற கருத்தை கொண்டது தான் திராவிட மாடல் ஆட்சி ஆகும். அறிவார்ந்தவர்கள் நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும் என்பது இல்லை. நமக்கு தேவையானவற்றை படிக்கும் பழக்கத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். மேலும் வீட்டில் உள்ளவர்கள் குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி கொடுத்து அவர்களுக்கு படிக்கும் திறனை அதிகப்படுத்த வேண்டும். புத்தகம் படிப்பது மூலம் ஞாபகத் திறன் அதிகரிக்கும்” என்று கூறியுள்ளார். குறிப்பாக இந்த புத்தகத் திருவிழாவில் அனைத்து புத்தகங்களும் 10 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கண் காட்சிக்கு வந்தவர்கள் புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Categories

Tech |