கடந்த 2009 ம் வருடம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகிய அவதார் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிரம்மாண்டத்தின் உச்சத்தில் இருந்த இந்த படத்தின் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த படத்தின் வெற்றியைத் அடுத்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 2 “தி வே ஆஃப் வாட்டர்” பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் ஜோ சல்டனா, சாம் வோர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற வருடம் நிறைவு பெற்ற சூழ்நிலையில் படக்குழு இப்போது இறுதிக்கட்ட பணியில் தீவிரம்காட்டி வருகிறது. அவதார் 2 திரைப்படத்தில் டைட்டானிக் திரைப்பட நாயகி கேட் வின்ஸ்லெட், நவி வீரர் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் கேட்வின்ஸ்லெட்டின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. அத்துடன் இந்த படம் டிசம்பர் 16ஆம் தேதி உலகெங்கிலும் திரை அரங்குகளில் வெளியாகவுள்ளது.