Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புதுவித மும்முனை தாக்குதல்… சென்னைவாசிகள் அவதி…மாநகராட்சி அலட்சியம்…!!!

கொரோனா காலகட்டம்  நிலவும் இவ்வேளையில் சென்னைவாசிகளுக்கு புதிதாக 3பிரச்சனைகள் வந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர் .

வடகிழக்கு பருவமழை,நிவர் மற்றும் புரவி புயல்கள் காரணமாக கடந்த மாதம் இறுதியிலிருந்து இந்த மாதம் முதல் வாரம் வரை சென்னையில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. ஆகையால் சில நாட்களாகவே சூரிய வெளிச்சமும் தென்படவில்லை. பருவமழை தற்போது சிறிதளவு குறைந்து இருக்கிறது. இருப்பினும் மாலை நேரம் குளிரின் தாக்கம் சென்னையில் அதிகரிக்க தொடங்குகிறது. இதனால் சென்னை மாநகரமே “சின்ன ஊட்டி” போன்று மாற்றம் அடைகிறது.

குளிரின் தாக்கத்தை தாங்க முடியாத மக்கள் ஸ்வெட்டர்கள், போர்வைகளை தங்கள் வீடுகளில் வாங்கி வைத்து விட்டனர். இரவில் குளிர் நிலையில் மக்கள் மின் விசிறியை போடாமல் இருந்தாள் கொசுக்கள் அனைத்தும் அவர்களை படுத்தி எடுக்கிறது. இதனால் அவர்கள் தூக்கத்தை இழந்து அவதிப்படுகின்றனர். மின்விசிறி போட்டாள் குளிர்கிறது, போடா விட்டால் கொசு கடிக்கிறது போன்ற சிக்கல்களில் சென்னைவாசிகள் உள்ளனர். தன்னைக் கடிக்க வரும் கொசுக்களை அவர்கள் கொசு விரட்டியை வைத்து விரட்டினாலும் கொசுக்கள் அதற்கு அஞ்சுவதாக தெரியவில்லை.

இதனை தாங்க முடியாத சென்னைவாசிகளுக்கு அடுத்த துன்பம் எலியால் வந்துள்ளது. தற்போது அங்கு எலிகளின் தொல்லை அதிகரித்துவிட்டது. சமையலறையில் பாத்திரங்கள் தள்ளிவிட்டும், காய்கறி பழங்கள் ஆகியவற்றை கடித்தும் மிகவும் தொல்லை செய்து வருகிறது. அது மட்டுமின்றி அவர்களை மேலும் தூங்க விடாமல் இரவில் “கீச் கீச்” என்ற சத்தத்தை எழுப்பி தொந்தரவு செய்கிறது.இரவில் தூக்கத்தை கெட்ட மக்கள் அந்த எலிகளை கொள்வதற்காக எலி வேட்டையில் ஈடுபடுகின்றனர். எலிகளை தேடி பூனை வருவதால் அதனுடைய சத்தங்களையும் கேட்க பொறுக்காமல் சென்னைவாசிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.

கொசுக்களுக்கு பயந்து கொசுவலை களையும் எலிகளுக்கு பயந்து எரிக் குண்டுகளையும் மற்றும் மருந்துகளையும் மக்கள் கடைகளில் வாங்கி வருகின்றனர். கடுமையான குளிர், கொசுக்கடி, எலித் தொல்லை ஆகிய மூன்று பல்வேறு காரணங்களினால் சென்னைவாசிகள் மிகவும் கவலையுடன் உள்ளார்கள். கொசுக்கள் கடிப்பதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் வந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

மாநகராட்சி சார்பில் கொசு மருந்து மழை காலங்களில் தெளிக்கப்படும். புகை வழியாகவும்  கொசுக்களை ஒழிக்க மருந்து அடிக்கும். ஆனால், இம்முறை கொசு ஒழிப்பு பணிகள் எவற்றிலும் மாநகராட்சி ஆர்வம் காட்டவில்லை. அதனால் சென்னைவாசிகள் கொசுக்களை ஒழிக்க குடியிருப்பு பகுதிகளில் தினந்தோறும் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சென்னைவாசிகள் கடும் குளிர், கொசுக்கடி, எலித் தொல்லை போன்ற மூன்று காரணங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

Categories

Tech |