Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி வாகன ஓட்டிகளுக்கு இனி அபராதம் கிடையாது…. வெளியான புதிய அதிரடி அறிவிப்பு…..!!!

புதுச்சேரியில் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் பின் அமர்ந்து செல்போரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கடந்த அக்டோபர் 29ஆம் தேதி போக்குவரத்து எஸ்பி மாறன் அறிவித்திருந்தார்.இந்நிலையில் அவ்வாறு பயணிப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் மூன்று மாதத்திற்கு ஓட்டுனர் உரிமம் ரத்தம் செய்யப்படும் என எச்சரிக்கை தற்போது விடுத்துள்ளார்.இந்த எச்சரிக்கை அறிவிப்பு புதுச்சேரி முழுவதும் பல இடங்களில் பொதுமக்கள் பார்வையில் வைக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் எதிர்க்கட்சிகள் அபராதம் விதைக்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என மனு அளித்த நிலையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஹெல்மெட் அணையாதவர்களுக்கு அபராதம் வசூலிப்பதிலிருந்து விலக்கு அளிக்க பரிந்துரை செய்வதாக முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து மக்களை கட்டாயப்படுத்தி ஹெல்மெட் அணிய வைக்க கூடாது, அனைவருக்கும் அபராதம் விதிப்பதும் முடியாத காரியம்,ஆனால் மக்கள் விருப்பப்பட்டு ஹெல்மெட் அணிந்தால் விபத்தும் உயிரிழப்பும் குறையும் என எஸ்பி மாறன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |