புதுச்சேரி – யாழ்ப்பாணம் இடையே பயணிகள், சரக்கு படகு சேவைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
காரைக்காலுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையேயான கப்பல் சேவைகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் பல்வேறு காரணங்களுக்காக அது நிறுத்தப்பட்டது. சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காரைக்கால் மற்றும் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் இடையே 56 கடல் மைல் (103.7 கிலோமீட்டர்) தூரத்திற்கு படகு சேவையை தொடங்க கப்பல் போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதுதொடர்பாக இருதரப்பு ஆலோசனை நடத்திய நிலையில் புதுச்சேரி – யாழ்ப்பாணம் இடையே படகு சேவைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கையில், ‘ யாழ்ப்பாணம், பலாலியில் இருந்து இந்தியாவின் திருச்சிக்கு விமானப் பயணம் மற்றும் இந்தியாவின் காங்கேசன்துறை மற்றும் பாண்டிச்சேரிக்கு இடையே படகுச் சேவைக்கு அமைச்சரவை ஒப்புதல் தரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.