Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி முதல்வராக மே 7-ந் தேதி ரங்கசாமி பதவியேற்பு….!!!!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற்றது. 30 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடந்து முடிந்தது. அதில் என் ஆர் காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது. அந்தத் தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இந்நிலையில் புதுச்சேரியில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தன.

இதுபற்றி என் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி,பாஜக தலைவர் நிர்மல் குமார் மற்றும் பிற தலைவர்களுடன் நடைபெற்ற ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு ரங்கசாமிக்கு முதல்வர் பதவி அளிப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து புதுச்சேரி முதல்வர் மே 7-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி அமைச்சரவையில் பாஜக இடம்பெறும். புதுச்சேரியில் இதுவரையில் துணை முதல்வர் இல்லை. மத்திய அரசு பரிந்துரை செய்தால் முடிவு எடுக்கப்படும். பதவியேற்றவுடன் புதுச்சேரியில் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பேன் என்றும் அறிவித்துள்ளார்.

Categories

Tech |