Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி அரசைக் கண்டித்து சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற பாஜகவினர்!

புதுச்சேரி அரசைக் கண்டித்து பாஜகவினர் சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி மாநில மக்களுக்கு கடந்த 24 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகள் கணக்கில் வங்கியில் பணமாக செலுத்த வலியுறுத்தி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் 200 மேற்பட்ட பாஜகவினர் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்றதால் அங்கு பதட்டம் நிலவியது. புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக இலவச அரிசி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் அரிசிக்கு பதில் வழங்க உத்தரவிடுமாறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பயனாளிகள் அனைவருக்கும் வாங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

இதையடுத்து கடந்த 23 மாதங்களாக வழங்க இருந்த ரூ .13,800 பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்த வேண்டும் மற்றும் மின்சாரக்கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கு மேற்பட்ட பாஜகவினர் பேரணியாக வந்தனர். அப்போது புதுச்சேரி சம்பாகோவில் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதன்காரணமாக அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

Categories

Tech |