Categories
தேசிய செய்திகள்

“புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம்”….. மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த நான்கு மாதங்களாக தொற்று பரவல் வெகுவாக குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களில் மற்றும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் புதுச்சேரியில் தொற்று பாதிப்பு 110 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் 1,769 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் புதுச்சேரியில் 82 பேருக்கும், காரைக்காலில் 12 பேருக்கும், ஏனாமியில் 16 பேர் என 110 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 625 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |