Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்…. உயர்நீதிமன்றத்தில் தடை கோரி முறையீடு….!!!

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் வைரஸ் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் அண்டை மாநிலம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு  தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக பிற்பகல் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Categories

Tech |