Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைப்பு…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!!!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தை போன்று புதுச்சேரி மாநிலத்திலும் பெட்ரோல் விலைலிட்டர்  100 ரூபாய் கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெட்ரோல் மீதான 3% வாட் வரியை  குறைப்பதற்கான அமைச்சரவையின் முடிவிற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார.  இதனை அடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 43 காசுகள் குறைந்துள்ளது. புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள  நிலையில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |