புது சத்திரம் அடுத்த பெரிய குப்பம் தனியார் என்ணை சுத்திகரிப்பு ஆலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரும்பு தளவாடப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் அங்கு ரோந்து பணியில் இருந்த பொதுச்சத்திரம் போலீசார் அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம நபர்கள் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில் புதுசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசார் புதுச்சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜி (28) குறவன் வீடு பகுதியைச் சேர்ந்த வினோத் (26) போன்ற இருவரை கைது செய்துள்ளனர்.