Categories
தேசிய செய்திகள்

புதுசா ஒன்னு கிளம்புது மக்களே….! அந்த புயலுக்கு என்ன பெயர் தெரியுமா…???

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதியில் நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகியிருக்கும் இந்த புயலுக்கு “ஜாவித்”என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜாவித் என்றால் அரபு மொழியில் கருணை என்று அர்த்தம்.

இந்த புயல் காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி ஒடிசா மாநிலத்திலும், டிசம்பர் 5-ஆம் தேதி மேற்கு வங்காளத்திலும், அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும், கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |