Categories
தேசிய செய்திகள்

புதிய விதிமுறை…. ஜூலை 1 முதல் அமல்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

டிடிஎஸ் எனப்படும் மூல வரி பிடித்தம் தொடர்பான புதிய நடைமுறை வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. நிறுவனங்கள், ஊழியர்களின் ஊதியத்தில் மூல வரி பிடித்தம் செய்கின்றன. வருமான வரி கணக்கு தாக்கலில், வரி விலக்கு முதலீடுகள் அடிப்படையில், பிடித்தம் செய்த மூல வரியை திரும்பப் பெறலாம். இதற்காக வருமான வரி சட்டத்தின் புதிதாக ‘194- ஆர்’ என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் பெரும் 20 ஆயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட இலவச மாதிரி மருந்துகளுக்கு மூல வரி பிடித்தம் செய்யப்படும். இதனைப் போலவே இலவச பயண டிக்கெட் மற்றும் சமூக ஊடகங்களில் செய்யப்படும் விளம்பரம் 20 ஆயிரம் ரூபாயை தாண்டும் பட்சத்தில் மூல வரி பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |