புதுச்சேரியில் புதிய மின் இணைப்பை பெறுவதற்கு இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மின்துறை கண்காணிப்பு பொறியாளர் கூறியுள்ளார்.
புதுச்சேரி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: “புதுச்சேரி மின் நுகர்வோர்கள், புதிய மின் இணைப்பை விரைவாக பெறுவதற்கு இணையதள வாயிலாக விண்ணப்பிக்கும் முறையை புதுவை அரசு நேற்று முதல் அறிமுகம் செய்துள்ளது.
இந்த வசதியை மின் துறை செயலாளர் தேவேஷ் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மின்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் புதிய மின் இணைப்புக்கான விண்ணப்பத்தை மின்துறை இணையதள முகவரி https:/pe-ds-e-rv-i-ces.py.gov.in வாயிலாக சமர்ப்பிக்கலாம். முதற்கட்டமாக குறைந்த அழுத்த மின் நுகர்வோர்களுக்கு வீடு, வர்த்தகம், விவசாயம் மற்றும் சிறுதொழில் செய்வோருக்கு இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.