Categories
Uncategorized

புதிய நிறத்தில் அறிமுகமாகும்…. டிவிஎஸ்-ன் எண்டார்க் 125…. ஆவலுடன் வாடிக்கையாளர்கள்….!!!!

என்டார்க் 125 ஸ்கூட்டரை டிவிஎஸ் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் ப்ளூ நிறத்தில் உள்ளது. அதோடு இதில் செக்யூரிட்டி பிளாட் கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டருடைய புதிய நிறத்தின் விலை ரூபாய் 87011 என எக்ஸ் ஷோரூம் நிர்ணயம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்போர்ட் ப்ளூ நிற வேரியண்டில் புது நிறத்தை தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில் டிவிஎஸ் நிறுவனத்தினுடைய எண்டார்க் மாடலில் 124.8 cc, மூன்று வால்வுகள் கொண்ட ஏர்கூல்டு எஞ்சின் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

இந்த என்ஜினானது 9.25 hp power, 10.5 Nm டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றது. மேலும் இந்த மாடலில் 12 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதோடு மோனோ ஷாக் சஸ்பென்ஷன் யூனிட், டெலிஸ்கோபிக் போர்க் ஆகியவையும் தரப்பட்டுள்ளது. மேலும் பிரேக்கிற்கு முன்புறம் டிஸ்க் பிரேக்கும் டிரம் பிரேக்கும் தரப்பட்டுள்ளது. குறிப்பாக இதே ஸ்கூட்டர் டூயல் ட்ரம் பிரேக் வேரியண்டிலும் கிடைக்கின்றது. இந்த என்டார்க் புதிய ப்ளூ நிற வேரியண்டுகளுக்கான முன்பதிவை டிவிஎஸ் நிறுவனம் ஏற்கனவே துவங்கிவிட்டது. இதற்கான விநியோகம் வரும் நாட்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |