Categories
மாநில செய்திகள்

“புதிய திட்டம்”…. இறையன்பு போட்ட அதிரடி உத்தரவு…. வெளியான தகவல்…..!!!!

ஒன்றிய அரசின் திட்டங்களை துரிதமாக செயல்படுத்தும் புதிய திட்டத்துக்கான தொடா்பு அதிகாரியாக மங்கத்ராம் ஷர்மா நியமிக்கப்பட்டாா். இந்த திட்டத்துக்கான உத்தரவை தலைமைச் செயலாளரான வெ.இறையன்பு வெளியிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய அரசின் திட்டங்களை குறித்த காலத்திற்குள் விரைந்து செயல்படுத்தும் அடிப்படையிலும், அவை மக்களுக்குச் சென்றடைவதை அவா்கள் மூலமே ஆய்வு செய்யும் வகையிலும் புதிய முயற்சியை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது.

இது தொடர்பான தகவலை நீதி ஆயோக் அமைப்பு மாநில முதல்வருக்குத் தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் திட்டங்கள் ஆய்வு ஆகிய பணிகளுக்காக சில மாவட்டங்களும் தேர்வு செய்யப்பட்டன. அந்த வகையில் ராமநாதபுரம், விருதுநகா், காஞ்சிபுரம், திருச்சி, கடலூா், கன்னியாகுமரி, வேலூா் மாவட்டங்களில் பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்தப் புதிய திட்டத்துக்கான தொடா்பு அதிகாரியாக முதன்மைச் செயலா் அந்தஸ்திலான அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் நீதி ஆயோக் அமைப்பு கேட்டுக் கொண்டிருந்தது. அதன்படி அரசின் முதன்மைச் செயலாளரான மங்கத்ராம் ஷர்மா தொடா்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா். நீர்ப்பாசன விவசாய நவீனமயமாக்கல், நீர்நிலைகள் மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மை திட்ட இயக்குநர் பதவி வகித்து வந்த மங்கத்ராம் ஷர்மாவுக்கு கூடுதலாக சமூக சீரமைப்புத்துறை கடந்த ஜூன் மாதத்தில் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

Categories

Tech |