அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தருண் ஜீத் சிங் சாந்து தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான சுகாதாரத்துறை ஒத்துழைப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தருண் ஜித் சிங் சாந்து கூறியிருப்பதாவது, இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளதால் கோா்பிவேக்ஸ், கோவோவேக்ஸுக்கும், மால்னுபிராவிா் மாத்திரைக்கும் அவசர கால மருந்துகளுக்கும் இந்தியா அனுமதி அளித்துள்ளது என கூறியுள்ளார்.
டெக்ஸாஸில் உள்ள மருத்துவ கல்லூரியில் நடைபெறும் பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் நோவோவேக்ஸ் நிறுவனத்துக்கும் தரண்ஜீத் சிங் நேரில் சென்று இந்தத் தடுப்பூசிகளின் தன்மை மற்றும் பயன்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் 3,000 பேரிடம் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் கோா்பிவேக்ஸ் பாதுகாப்பானது எனவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்தக் கூடியது எனவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.