நடிகர் சஞ்சீவ் தனது புதிய சீரியலை பூஜையுடன் தொடங்கியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் சஞ்சீவ். இவர் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ஆலியா மானசாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஐலா சையத் என்கிற ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து நடிகர் சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தார். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது.
சமீபத்தில் சன் டிவியில் புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக சஞ்சீவ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் சஞ்சீவ் நடிக்கும் புதிய சீரியல் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் விஷன் டைம்ஸ் தயாரிக்கும் இந்த சீரியலுக்கு ‘கயல்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது .