இஸ்ரேல் அறிவித்துள்ள சட்டத்தால் ஆத்திரம் அடைந்துள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இஸ்ரேல் சர்ச்சையை ஏற்படுத்த கூடிய புதிய சட்டத்தை நிறைவேற்றி இருக்கின்றது. அது பாராளுமன்றத்தில் வரையறுக்கப்பட்ட மேற்பார்வையுடன் கொரோனா வைரஸினை கையாள்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கத்தினை அனுமதிக்கின்றது. தற்போது புதிதாக போடப்பட்டுள்ள புதிய கிராண்ட் கொரோனா சட்டமானது அமைச்சரவை மற்றும் புதிய ஊரடங்கு போன்ற அவசரமாக செயல்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு உதவி செய்கின்றது. பின்னர் 24 மணி நேரத்திற்கு பின்னர்தான் பாராளுமன்றம் முடிவுகளை மறுபரிசீலனை செய்வதற்கு அனுமதி அளிக்கும். இத்தகைய சட்டமானது ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு புண்படுத்துவதாக எதிர்க்கட்சி நபர்களால் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நெருக்கடியிணை சமாளிப்பதற்கு தங்களின் அதிகாரத்தினை பயன்படுத்த வேண்டியுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
தற்போது உள்ள காலகட்டத்தில், சென்ற ஒரு வாரத்தில் மட்டும் இஸ்ரேல் ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேலானகொரோனா தொற்று உள்ள வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதனால் வேலையின்மை சாதனை அளவினை எட்டியிருக்கின்றது. மேலும் பணி நிறுத்தம் மற்றும் பொருளாதார ஆதரவின் தாமதங்கள் பற்றி இறுதியாக எடுக்கக்கூடிய முடிவுகளில் மக்கள் மிகவும் ஆத்திரமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும் சிலர் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.