போரிஸ் ஜான்சன் புதிய கொரோனோ வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.
பிரிட்டன் கேபினேட் அலுவலக அமைச்சர், இங்கிலாந்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் மார்ச் மாதம் வரை தொடர வாய்ப்புள்ளது என்று அறிவித்துள்ளார். மேலும் அடுத்த ஏழு வாரங்களுக்குள் சுமார் 13 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரிட்டன் பிரதமர் அறிவித்துள்ளார். மேலும் அவ்வாறு திட்டமிட்ட நேரத்தில் தடுப்பூசி போடப்படாமல் என்றால் போரிஸ் ஜான்சன் அறிவிப்பின்படி பொது முடக்கம் பிப்ரவரி மாதத்தின் இறுதியில் முடிவுக்கு வராது.
அதாவது மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று பிரிட்டன் கேபினெட் அலுவலக அமைச்சர் Mickel Gove எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தீவிரமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸிற்கு எதிராக தற்போது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தால் மருத்துவமனைகள் முழுவதும் நிரம்பி வழியும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தான் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது போல் பொது முடக்கத்தை அறிவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு போரிஸ் ஜான்சன் தள்ளப்பட்டுள்ளார்.