Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறை…. இனி நீங்கள்லாம் முக கவசம் போட வேண்டாம்…. அறிவிப்பு வெளியிட்ட பிரபல நாடு….!!

அமெரிக்காவில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் படி 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் முகக் கவசம் அணிய வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மொத்த மக்கள் தொகையில் 43 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அதில் 29% பேருக்கு இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனால் புதிய கொரோனா புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். அதில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் நடைபயிற்சி வெளியில் செல்லும்போது முக கவசம் அணியாமல் செல்லலாம் என்றும் தேவைப்பட்டால் பொது இடங்களில் கவசம்பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வைரஸை எதிர்கொள்ள இந்த புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறை எடுக்கப்பட்டுள்ளது என்றும் உங்களின் ஒத்துழைப்பால் இந்த வெற்றியை அடைந்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இறப்பு  80 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |