அஜ்மானில் கொரோனா லேசர் பரிசோதனை மையத்தை அஜ்மான் பட்டத்து இளவரசர் தொடங்கி வைத்துள்ளார்.
உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவ்வகையில் அமீரகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கொரோனாவை பரிசோதனை செய்யும் கொரோனா லேசர் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் வடக்குப் பகுதிகளில் இவ்வாறான பரிசோதனை மையம் முதன்முதலாக அமைக்கப்பட்டது. அந்த மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் 50 திர்ஹாம் செலவில் மூன்று நிமிடத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த மையத்தில் 20 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு, நாள்தோறும் 6 ஆயிரம் முதல் 8000 வரையில் பரிசோதனை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோணா பரிசோதனை மையத்தை அஜ்மான் பட்டத்து இளவரசர் ஷேக் அம்மார் பின் ஹீமைத் அல் நுயைமு நேற்று தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவர் ஆற்றிய உரையில், ” அஜ்மான் பகுதியில் கோரோணா பரிசோதனையை விரைவுபடுத்த கூடியவகையில் நவீன லேசர் உதவியுடன் செய்யப்படும் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக கொரோனா பரவுவதை முற்றிலுமாக தடுக்க முடியும்” என்ற அவர் கூறியுள்ளார்.
இந்த மையத்தை தொடங்கி வைத்த அவர், முதலாவது ஆளாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதுமட்டுமன்றி அவருடன் வந்தவர்களும் கொரொனா பரிசோதனையை செய்து கொண்டனர். இந்தப் புதிய கொரோனா லேசர் பரிசோதனை மையத்தில் பணிகள் பற்றி அந்த மையத்தின் திட்ட இயக்குனர் பட்டத்து இளவரசருக்கு விரிவாகக் கூறினார். மேலும் இந்த புதிய மையத்தின் திறப்பு விழாவில் அஜ்மான் அரசின் சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறையின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.