Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா தடுப்பூசி…. உருமாறிய கொரோனாவுக்கு எதிராக செயல்படும்…. ஆய்வறிக்கையை வெளியிட்ட பிரபல நாடு….!!

ரஷ்யா ஸ்புட்னிக் லைட் என்ற புதிய கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதனால் உலக நாடுகள் பல்வேறு வகையான தடுப்பூசிகளை கண்டுபிடித்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா புதிதாக  ‘ஸ்புட்னிக் லைட்’ என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த தடுப்பூசியின் ஆய்வு முடிவுகள் குறித்து ரஷ்ய நுண்கிருமிகள் மற்றும் தொற்று ஆய்வுக்கூடத்தின் தலைவர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்ட் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஸ்புட்னிக் லைட்’ ஒரு டோஸ் மட்டும் எடுத்து கொண்டால் போதும் என்றும் அது 79.4  சதவீதம் வெற்றிகரமாக செயல்படுகிறது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த தடுப்பூசி புதிய கொரோனா வகைகளுக்கும் எதிராக செயல்படுகிறது என்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அதிக எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ரஷ்யா ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து மூன்றாம் கட்ட மருத்துவ ஆய்வு நடத்தப்படவுள்ளதாகவும் அதன் முடிவுகள் இந்த மாதம் இறுதியில் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி 10 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக இருப்பதால் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய இயலும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |