சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சீனாவில் வேகமெடுத்துள்ள ஒமிக்ரான் BF.7 தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. BF.7, BF.12 ஆகிய 2 வகை தொற்று குஜராத்தில் மூவரிடம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில்,இந்தியாவில் புதிய கொரோனா பரவ ஆரம்பித்துள்ள நிலையில், கொரோனாவை கையாள்வதற்கான அவசரகால ஒத்திகை டிச.27ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா அவசரகால ஒத்திகை நடைபெறுகிறது. அரசு மருத்துவமனையில் நடக்கும் ஒத்திகை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மாண்டவியா பங்கேற்கிறார்.