Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று நீலகிரி,கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், வேலூர், ராணிப்பேட்டை, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வருகின்ற 9ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்.

இதையடுத்து வருகின்ற 10 ஆம் தேதி மத்திய கிழக்கு கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |