Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….!!!!

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன்பிறகு ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் நோக்கி நகர்ந்து செல்லும். அதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதன்படி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் 15ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |