வங்கக் கடலில் மீண்டும் ஒன்பதாம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கின்றது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ரெட்அலர்ட் விட வாய்ப்பு இருக்கின்றது. கடந்த 4ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து இரண்டு நாளில் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
