Categories
மாநில செய்திகள்

புதிய கல்விக் கொள்கை ….”ஆளுநர் ஆதரவு தெரிவிக்க வேண்டும்”…. உயர் கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள்….!!!!!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு முடிவுகளை மாணவர்களின் நலன் கருதி இந்த மாதத்திற்குள் வெளியிட வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால் மாணவர்களும், பெற்றோர்களும் பாதிப்படைந்து இருக்கின்றனர். தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால் தமிழகத்தில் கலந்தாய்வுக்கான தேதிகளில் மாற்றம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

மேலும் புதிய கல்விக் கொள்கையில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று  ஒன்றிய  இணைய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் இந்தி படிப்பவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் நிலை புதிய கல்விக் கொள்கையில் இருக்கிறது. அதனால் தான் இரு மொழிக் கொள்கை போதும் என்று  தெரிவித்து வருகின்றோம். நீட் தேர்விற்கான சட்ட மசோதா இன்னும் ஆளுநர் மாளிகையில் பரிசீலையில் இருப்பதாக கூறப்படுவது பற்றி முதல்வர் உரிய முயற்சிகளை முன்னெடுப்பார்.

மாநில அரசு கொண்டுவர இருக்கும் கல்விக் கொள்கையை ஆளுநர் ஆதரிக்க வேண்டும் இன ரீதியாக இல்லாமல் மொழி ரீதியாக எந்தவித வேறுபாடும் இல்லாமல் இருப்பது தான் திராவிட மாடல் என முதல்வர் கூறுகின்றார். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் கேந்திர வித்யாலயா நவோதயா சைனிக்  பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை தமிழ் மொழி பாடம் கட்டாயமாக கற்று  தருவதற்கு இணை அமைச்சர் முருகன் வலியுறுத்துவாரா என அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Categories

Tech |